அரக்கோணம்-கடப்பா இடையே 27 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் இயக் கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

After 27 months, Arakkonam-Kadapa train service resumes



கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் படிப்படியாக சில ரயில்கள் முன்பதிவு இருக்கைகளாக அறிவிக்கப்பட்டு இயங்க தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் முன்பதிவு இல்லாத ரயில்களும் இயங்க தொடங்கியது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2020ல் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்கக்கோரி சில மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று நேற்று முன்தினம் முதல் இந்த ரயில் இயங்க தொடங்கியது. 27 மாதங்களுக்கு பிறகு இயங்கிய இந்த பாசஞ்சர் ரயில், நேற்று முன்தினம் முதல் முதல் 'மெமு சிறப்பு ரயில்' என பெயர் மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

முன்பதிவு இல்லாத இந்த ரயிலில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் அரக்கோணத்தில் தினமும் காலை 7.05க்கு புறப்பட்டு காலை 11.45 மணியளவில் கடப்பாவை சென்றடையும். அதேபோன்று மாலையில் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் வந்தடையும். அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக நகரி, புத்தூர், ரேணிகுண்டா வழியாக 27 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 27 மாதங்களுக்கு ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந் தனர்.