இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாள்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. 

இதன்படி வரும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை ஆகிய வார விடுமுறை நாள்கள் தவிர்த்து, மொஹரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறையாகும். 

Banks have 10 days holiday in August

வங்கி விடுமுறை நாள்களின் விபரம்:


ஆகஸ்ட் 7 (ஞாயிற்றுக்கிழமை)

ஆகஸ்ட் 9 (செவ்வாய்க்கிழமை) மொஹரம்

ஆகஸ்ட் 13 (இரண்டாவது சனிக்கிழமை) ஆகஸ்ட் 14 (ஞாயிற்றுக்கிழமை)

ஆகஸ்ட் 15 (திங்கள்கிழமை) சுதந்திர தினம் ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட் 21 (ஞாயிற்றுக்கிழமை)

ஆகஸ்ட் 27 (நான்காவது சனிக்கிழமை)

ஆகஸ்ட் 28 (ஞாயிற்றுக்கிழமை)

ஆகஸ்ட் 31 (புதன் கிழமை) விநாயகர் சதுர்த்தி.