அரக்கோணம் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த புகழேந்தி கணேஷ், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூரில் பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பி பிரபு அரக்கோணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டையில் பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பி தனுசியா தென்காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார்.
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு இடங்களுக்கு நியமனம் செய்து உத்தரவிட்டார்.