குறள் : 825
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
மு.வ உரை :
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
கலைஞர் உரை :
மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது
சாலமன் பாப்பையா உரை :
மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.
Kural 825
Manaththin Amaiyaa Thavarai Enaiththondrum
Sollinaal Therarpaatru Andru
Explanation :
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
Horoscope Today: Astrological prediction for July 29, 2022
இன்றைய ராசிப்பலன் - 29.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
29-07-2022, ஆடி 13, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.22 வரை பின்பு வளர்பிறை துதியை. பூசம் நட்சத்திரம் காலை 09.47 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. அம்மன் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
சூரிய உதயம் 6.2 கடக லக்கனம் இருப்பு நாழிகை 3 விநாடி 22
இன்றைய ராசிப்பலன் - 29.07.2022 | Today rasi palan - 29.07.2022
மேஷம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழச்சிகள் நடைபெறும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.
துலாம்
இன்று உங்களுக்கு தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
மகரம்
இன்று உங்களுக்கு உள்ளம் மகிழும் இனிய நிகழ்வுகள் நடைபெறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழச்சி நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001