குறள் : 808

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு

நாளிழுக்கம் நட்டார் செயின்


மு.வ உரை :

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும் கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.


கலைஞர் உரை :

நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்


சாலமன் பாப்பையா உரை :

நண்பன் உரிமை எடுத்துச் செய்து பிழையை அடுத்தவர் எடுத்துக்காட்டியும் ஏற்றுக் கொள்ளாத நட்புரிமை உடையவர்க்கு நண்பன் பிழை செய்யும் நாள் பயனுள்ள நாளாம்.


Kural 808

Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku

Naalizhukkam Nattaar Seyin


Explanation :

To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends that is a (profitable) day on which the latter may commit a fault.

Horoscope Today: Astrological prediction for July 12, 2022


இன்றைய ராசிப்பலன் - 12.07.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

12-07-2022, ஆனி 28, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.01 வரை பின்பு பௌர்ணமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.21 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 02.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Nalla Neram

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய உதயம் 5.59 மிதுன லக்கனம் இருப்பு நாழிகை 0 விநாடி 49

இன்றைய ராசிப்பலன் -  12.07.2022 | Today rasi palan - 12.07.2022

மேஷம்

இன்று உங்களுக்கு மன அமைதி சற்று குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.  


சிம்மம்

இன்று சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். உடன்பிறப்புகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும்.

துலாம்

இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். பொன் பொருள் சேரும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சுபகாரியங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். 


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001