குறள் : 799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
மு.வ உரை :
கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
கலைஞர் உரை :
ஒருவர் கொலைக்கு ஆளாகும் போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
சாலமன் பாப்பையா உரை :
கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.
Kural 799
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum
Explanation :
The very thought of the friendship of those who have deserted one at the approach of adversity will burn one�s mind at the time of death.
Horoscope Today: Astrological prediction for July 03, 2022
இன்றைய ராசிப்பலன் - 03.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-07-2022, ஆனி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 05.07 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 06.30 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 06.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Rasi Palan
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 03.07.2022 | Today rasi palan - 03.07.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகன பழுதிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சிறப்பாக இருந்தாலும் குடும்பத்தில் ஏற்படும் சுப செலவுகளால் கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலம் உண்டாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப் பலன்கள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வெளி பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அசையா சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
மகரம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மீனம்
இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001