கோவையில் 70 வயது முதி யவர் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதினார். கோவை விநாயகபுரத்தைச் சேர்ந்த முதியவர் எம். பிரின்ஸ் மாணிக்கம் (70), இளநிலை வேளாண்மை அறிவியல், பிஎச்.டி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ள இவர் பரோடா வங்கியில் மேலாளராகவும், தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.சி.ஏ. பிரிவு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது ஆங்கில மொழிப் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: நீட் தேர்வு குறித்து மாணவர்களிடத்தில் தேவையற்ற அச்சம் காணப்படுகிறது.

அந்த அச்சத்துக்கான காரணத்தை தெரிந் துகொள்ளவும், நீட் தேர்வில் என்னதான் உள்ளது என்பதை தெரிந்துகொள் வதற்காகவும் நீட் தேர்வினை எழுதினேன்.

ஆனால், மாணவர்கள் அச்சம் கொள்வது போல நீட் தேர்வு ஒன்றும் கஷ்டமாக இல்லை. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்தே வினாக்கள் கேட்கப்படுகின்றன.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத் திட்டங்களை முழுமையாக படித்திருந்தால் நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். பயிற்சி மையங்களுக்கு சென்றால்தான் வெற்றி பெற முடியும் என்றில்லை.

ஆனால், பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இதனால் தேர்வினை எதிர்கொள்வதற்கே மாணவர்கள் பெரும் அச்சம் கொள்கின்றனர்.

மாணவர்கள் முதலில் அச்சத்தை தவிர்த்து பாடத்திட்டத்தினை முழுமையாகவும், தெளிவாகவும் படித்தால் வெற்றி பெற்று சாதிக்கலாம் என்றார்.