சமையல் கேஸ் சிலிண்டர்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும்.

அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை விலையில் மாற்றம் ஏற்படும்.

விலை உயர்வு


அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 காசுகளாக இருந்தது. அதேபோல் மே மாதம் சிலிண்டர் விலை தொடக்கத்தில் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இதன் மூலம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1, 015 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகி வந்தது.பிறகு அதே மாதத்தில் மீண்டும் 3 ரூபாய் உயர்ந்து, 14.2 கிலோ சிலிண்டர் ரூ. 1,018.50 காசுகளுக்கு ஆக விற்கப்பட்டு வந்தது.

அதிர்ச்சி


ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.50 உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.