ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 44 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 264-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.