அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது “ஓம்” எனும் பிரணவம். பிரணவத்தின் தோற்றத்தை எப்படி யாராலும் அறிய முடியாதோ அவ்வாறே விநாயகரின் தோற்றத்தையும் யாராலும் அறிய முடியாது. 

தொடக்கம் என்பது இருந்தால்தான் முடிவு என்பது உண்டு. ஆகவே முதலும் முடிவும் இல்லாத முழுமுதற் கடவுள் விநாயகர். அம்மையும் அப்பனும் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால், இவர் “கணபதி, கணேசர், கணாதிபன், கணநாதர்” என்றெல்லாம் போற்றப்படுகிறார்.

“ஓம்”எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுற்கும் மூலமாக அமைந்துள்ளது. “ஓம்”எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார் .

“விநாயகர்” என்றால் “தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள். 


விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறௌம்.

“சதுர்த்தி” என்பது ஒரு ‘திதி”. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நான்காவது நாள் சதுர்த்தி ஆகும். 

சதுர்த்தியன்று விநாயகப்பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி ஆவணி 15 ம் நாள் 2022 விநாயக சதுர்த்தி தினம்.

விநாயகர் சதுர்த்தி தேதி மற்றும் முகூர்த்தம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பக்க்ஷ சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் பார்வதி தேவி களிமண்ணை கொண்டு ஒரு சிலை வடித்து அதற்கு உயிர் கொடுத்தார். அவரே விநாயகர் என்றும் மூவுலகத்திலும் போற்றப்படுகிறார் . 

இந்த ஆண்டு இந்த சதுர்த்தி திதி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. 

முகூர்த்தம் மற்றும் மூர்த்தி ஸ்தாபனம் விநாயகர் சிலையை வாங்கி பூஜையில் வைக்க சிலையை பக்தர்கள் வாங்கி தங்கள் இல்லத்தில் வைத்து பூஜிக்கலாம்.

பூஜை விதிகள்: 

விநாயகரை வழிபடவும், அவருக்கான பூஜை சடங்குகளைச் செய்யவும் முதல் கட்டமாக விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வர வேண்டும். 

வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும். 

சிலையை இல்லத்தில் வைத்து அதற்கான மந்திரத்தை கூற வேண்டும். பிறகு விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும். 

அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, விநாயகரை வழிபட வேண்டும். 

பின்னர் அவருக்கு பூக்கள், பழங்கள் , பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை "மோதகப் பிரியன்" என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம் . அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம். 

விநாயகர் துதிகளை பாடி அவரை மகிழ்விக்கலாம் 
பின்னர் ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் . 

அதன் பிறகு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம். 

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பம்சங்கள்: 


விநாயகரை பால வடிவத்தில் வழிபடுவார்கள். ஒருவர் வாழ்வில் பல்வேறு வளங்களையும், மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவதற்கு விநாயகரை வழிபடலாம். 

"விக்னம் தீர்க்கும் விநாயகர்" என்று விநாயகரை போற்றுவதுண்டு. 

ஒருவரின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் மற்றும் கஷ்டத்தைப் போக்க விநாயகர் வழிபாடு உதவும்.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். 

அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

நாமம் பல தத்துவம் ஒன்று!
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.

வன்னி பத்திரம் விநாயக பெருமானுக்கு மிக மிக உகந்தது. ஐந்து அக்னிகளுக்கு இடையில் நின்று செய்த தவப் பயனும், யாகங்கள் செய்து அடையும் புண்ணியமும் ஒரு வன்னி இலையால் விநாயகரை வழிபடுவோருக்கு உண்டாகும்.

விநாயக சதுர்த்தி பூஜை முறை


வீட்டில் சுலபமாக செய்ய விக்னேஸ்வர பூஜை
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீவிக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
- என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்...

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
விநாயக சதுர்த்தி: வழிபடும் நேரமும் சிறப்பும்; 
விநாயகர் அகவல்
ஆவணி மாதம் வரும் ’வளர்பிறை சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக விநாயகரை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு அவரைக் கொண்டாடினால், நமக்கு எல்லா விதமான நன்மைகளும் விளையும்.
விநாயகர் விரதம்

1. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக 
பிள்ளையாரை பிடித்தால் போதும் பொல்லாத துன்பங்களும் பொடிப்பொடியாகும். விநாயகரை வணங்கினால் ராகு கேது தோஷம் நீங்கும், சர்ப்ப தோஷம் நீங்கி சங்கடங்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷமும் தீரும். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் என பல பிரபல ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை அவல் பொரி வைத்து வைத்து வணங்கினாலும் தீராத தோஷங்களை தீர்த்து நல்வழி காட்டுவார். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்யலாம். அதே போல தோஷம் நீக்கும் விநாயகர் ஆலயங்களையும் தரிசிக்கலாம்.

திருவண்ணாமலை விநாயகர் பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் இருக்கிறது அல்லல்போம் விநாயகர் ஆலயம். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம். இந்தத்தலம் பிள்ளையாரின் முதல் படைவீடாகும்.

விருத்தாச்சலம் ஆழத்துப் பிள்ளையார் இது இரண்டாவது படைவீடு. தேவாரப்பாடல் பெற்ற- காசிக்குச் சமமானதாகக் கருதப்படுகிற விருத்தாசலத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கு எழுந்தருளியுள்ளார் ஆழத்துப் பிள்ளையார். பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நிதி கொண்டுள்ளார். படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை.

திருக்கடவூர் வாரணப் பிள்ளையார் இது மூன்றாவது படைவீடாகும். சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலத்தில் உள்ளது வாரணப் பிள்ளையார் ஆலயம். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால் கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிக்கவல்லவர்.