தமிழ் சினிமாவின் தரமான வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார், விஜய் சேதுபதி. 'சுந்தர பாண்டியன்', 'விக்ரம் வேதா', ‘பேட்ட’, “மாஸ்டர்”, “விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தார்.

இதனால் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பெரும் போட்டா போட்டி நடக்கிறது. அந்த வகையில் அல்லு அர்ஜூன் நடிக்கும் 'புஷ்பா-2' படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. புஷ்பா' படத்தின் முதலாம் பாகத்தில் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. ஆனால் 'கால்ஷீட்' பிரச்சினையால் அது நடக்காமல் போனது.

தற்போது 'புஷ்பா-2' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு ரூ.30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

கதாநாயகனை காட்டிலும் வில்லன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அதிகமாக வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் அவரது சம்பளமும் எகிறி இருக்கிறது.

'புஷ்பா-2' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.