அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் முடிந்துள்ளது. 
2005-ல் நாகார்ஜுனா ஜோடியாக சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அடுத்த வருடமே மாதவனின் ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில் வெளியான அருந்ததி படம் திருப்புமுனையாக அமைந்தது. எந்த ஒரு நடிகைக்கும் வாழ்க்கையில் ஒருமுறைதான் அருந்ததி படத்தில் நடித்த மாதிரி கதாபாத்திரம் அமையும். அருந்ததியில் நான் நடித்தது அதிர்ஷ்டம் என்று கூறி இருந்தார். 

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 3 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது இளம் நடிகர் நவீன் போலி செட்டியுடன் தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இது அனுஷ்காவுக்கு 48-வது படம். 

இந்த நிலையில் சினிமாவில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் முடிந்ததை அனுஷ்கா கேக் வெட்டி கொண்டாடினார்.இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியோடு நன்றியும் தெரிவித்துள்ளார். 

அனுஷ்காவுக்கு வலைத் தளத்தில் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்