நாளை பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். நாளை செவ்வாய்க்கிழமை வரும் சிறப்பு மிக்க வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும்.
நாளை பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருளும் நமக்கு கிடைக்கிறது. வைகாசி வளர்பிறை அஷ்டமி தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும், வணங்குவது சிறப்பாகும்.