முக்கிய நிகழ்வுகள் :-


👉 2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) வெளியிடப்பட்டது.

👉 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார். 


நினைவு நாள் :-


தாதாபாய் நவ்ரோஜி

👉சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜி 1825ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

👉இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம், இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த முதல் இந்தியர் இவர் தான்.

👉1852-ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். இவர் ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்பை சட்டப்பேரவை உறுப்பினராக (1885-1888) பணியாற்றினார்.

👉இவர் இந்தியர்களின் துயரத்தை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். இவர் காந்தியடிகள், திலகர் போன்ற பெருந்தலைவர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

👉இந்தியாவின் ஆதார வளங்கள், நிதி ஆதாரங்களை வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்கூறினார். இந்தியர்களின் தனிநபர் வருமானம் வெறும் ரூ.20 தான் என்று 1870-ல் சுட்டிக்காட்டினார்.

👉'பாவர்ட்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல் இன் இண்டியா' என்ற தனது நூலில் பிரிட்டிஷாரின் கொடுங்கோல் ஆட்சி பற்றிய உண்மைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது.

👉சுயராஜ்ஜியக் கொள்கையை முதன்முதலில் பிரகடனம் செய்த தாதாபாய் நவ்ரோஜி தனது 92வது வயதில் 1917ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


மைக் டைசன்

👉 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார். 

👉 இவர் 1982-ல் ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட் (heavyweight) சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்' என்ற பெருமையை பெற்றார்.

👉 ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் என்ற பெருமையை பெற்றவர்.

👉 இவர் 2006ல் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். புகழின் உச்சியில் சாதனை வீரராக திகழ்ந்த 'இளம் வெடி', 'இரும்பு மைக்' என போற்றப்படுகின்ற இவர் தனது 53வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


பால் பெர்க்

👉 வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற பால் பெர்க் (Paul Berg) 1926ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.

👉 நியூக்ளிக் அமிலங்களின் (nucleic acids) உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

👉 அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது என பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 

👉 ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வௌ;வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கிய முதல் விஞ்ஞானி பால் பெர்க் இன்று 93வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


இன்றைய தின நிகழ்வுகள்


296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.

1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன.

1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.

1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.

1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.

1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்கிலிடப்பட்டான்.

1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.

1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.

1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.

1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.[1]

1912 – கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

1922 – டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.

1936 – எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.

1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.

1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.

1959 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1960 – பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.

1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.

1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.

1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.

1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.

1994 – பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.[2]

1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.

1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.

1997 – மேலவளவு படுகொலைகள் நடைபெற்றது. சாதிய ஆணவத்தால் 7 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.

2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3]

2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.

2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்


கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)

1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)

1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)

1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்

1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்

1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)

1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்

1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்

1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்

1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி

1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்

இன்றைய தின இறப்புகள்


1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)

1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)

2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)

1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)

1945 – தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888)

1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)

1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)

2001 – பா. சத்தியசீலன், ஈழத்துக் கவிஞர் (பி. 1938)

2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)

இன்றைய தின சிறப்பு நாள்


சிறுகோள் நாள்

விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெல்ஜியத்தில் இருந்து 1960)

புரட்சி நாள் (சூடான்)

கடற்படை தினம் (இசுரேல்)