🏁 1968ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உலக தமிழ் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.


நினைவு நாள் :-


பாவலரேறு பெருஞ்சித்திரனார்

✍ இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், தமிழ் தேசியத்தந்தை என்று அறியப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும்.

✍ இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.

✍ மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் தன்னுடைய 62வது வயதில் 1995ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ராம் பிரசாத் பிஸ்மில்

🏁 விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார்.

🏁 இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு மாத்ரிவேதி(Matrivedi) என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.

🏁 மேலும், இவர் சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ்(Arya Samaj) இயக்கத்தில் இணைந்தார்.

🏁 தனது சகாக்களுடன் இணைந்து காகோரி (Kakori) சதித் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

🏁 1925-ல் காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, 1927 டிசம்பர் 19ஆம் தேதி தனது 30வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.


இன்றைய தின நிகழ்வுகள்


கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது.631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர்.

786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது.

1011 – லொம்பார்டு கிளர்ச்சி: பாரியின் கிரேக்கக் குடிமக்கள் லோம்பார்டி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர்.

1488 – இசுக்கொட்லாந்து மன்னர் மூன்றாம் யேம்சிற்கும், கிளர்ச்சிப் பிரபுக்களுக்கும் இடையே இடம்பெற்ற சமரில் மன்னர் கொல்லப்பட்டார்.

1509 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் அரகொன் இளவரசி கேத்தரீனைத் திருமணம் புரிந்தார்.

1594 – எசுப்பானியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பு பிலிப்பீன்சின் உள்ளூர்ப் பெருங்குடிகள், மற்றும் அதிகாரிகளின் உரிமைகளையும் சலூகைகளையும் அங்கீகரித்ததன் மூலம், தனது ஆட்சியை அங்கு உறுதிப்படுத்திக் கொண்டார்.

1770 – பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் சென்ற கப்பல் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் தரை தட்டியது.

1788 – உருசிய நாடுகாண் பயணி கெராசிம் இசுமாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.

1805 – அமெரிக்காவின் மிச்சிகனில் டிட்ராயிட் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1837 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஆங்கிலேயர்களுக்கும் ஐரிய மக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.

1853 – இலங்கை, கொழும்பு நகரில் கொம்பனித் தெருவில் லசுக்காரின்களின் (உள்நாட்டுப் போர்வீரர்களின்) குடியிருப்பு மனைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.[1]

1895 – வரலாற்றில் முதலாவது தானுந்து ஓட்டப் பந்தயம் பாரிசில் நடைபெற்றது.

1898 – சீனாவில் சமூக, அரசியல் கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நூறு நாள்கள் சீர்திருத்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் 104 நாட்களின் பின்னர் பேரரசி டோவாகர் சிக்சியினால் இடைநிறுத்தப்பட்டது.

1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.

1903 – செர்பியாவில் அதிகாரிகள் குழு ஒன்று அரசர் மாளிகையைத் தாக்கி மன்னர் அலெக்சாந்தர் ஒப்ரெனோவிச்சையும், அரசி திராகாவையும் படுகொலை செய்தனர்.

1917 – கிரேக்க இராச்சியத்தின் மன்னராக அலெக்சாந்தர் முடி சூடினார்.

1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சி, அல்ப்பைனில் அறிமுகப்படுத்தினார்.

1937 – பெரும் துப்புரவாக்கம்: சோவியத் ஒன்றியத்தில் யோசப் ஸ்டாலினின் உத்தரவுப்படி எட்டு இராணுவத் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: மால்ட்டா மீது முதற் தடவையாக இத்தாலிய விமானங்கள் தாக்குதலை நடத்தின.

1942 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துக்கு கடன்-ஒப்பந்தத்தில் நிவாரணம் வழங்க ஒப்புக் கொண்டது.

1955 – பிரான்சில் நடைபெற்ற தானுந்து ஓட்டப் பந்தயம் ஒன்றில் இரண்டு தானுந்துகள் மோதிக் கொண்டதில் 83 பார்வையாளர்கள் உயிரிழந்தனர், 100 பேர் வரை காயமடந்தனர்.

1956 – 1956 கல்லோயா படுகொலைகள்: இலங்கையின் வடக்கே கல்லோயாவில் சிங்களக் குடியேற்றிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1963 – தெற்கு வியட்நாமில் மத விடுதலையை வலியுறுத்தி திக் குவாங் டுக் என்ற பௌத்த மதகுரு தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார்.

1964 – இரண்டாம் உலகப் போர் வீரர் வால்ட்டர் சைஃபர்ட் செருமனியின் கோல்ன் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

1968 – உலகத் தமிழ்க் கழகம் தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.

1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் உயிரிழந்தனர்.

1991 – ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

2002 – அன்டோனியோ மெயூச்சி என்பவரே தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்கக் காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்.

2004 – நாசாவின் காசினி-ஐசென் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.

2007 – கடும் மழை, வெள்ளம் காரணமாக வங்காள தேசத்தில் சிட்டகொங் நகரில் மண்சரிவு காரணமாக 130 பேர் உயிரிழந்தனர்.

2008 – கனடியப் பழங்குடியினரின் தங்கல் வசதிகள் உடைய பள்ளியில் இடம்பெற்ற முறைகேடுகளுக்காக கனடா பிரதமர் இசுட்டீவன் கார்ப்பர் கனடிய முதல் குடிமக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

2010 – ஆப்பிரிக்காவில் முதலாவது உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாயின.

2012 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு நிலச்சரிவை ஏற்படுத்தியதில் ஒரு கிராமமே மூழ்கியது, 80 பேர் உயிரிழந்தனர்.

2018 – அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பிற்கும், வட கொரியா தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இன்றைய தின பிறப்புகள்


1838 – எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1898)1867 – சார்லசு பாப்ரி, பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1945)

1876 – அல்பிரட் எல். குறோபெர், அமெரிக்க-பிரான்சிய மானிடவியலாளர் (இ. 1960)

1894 – கீச்சிரோ டொயோடா, சப்பானியத் தொழிலதிபர், டொயோட்டா நிறுவனத்தைத் தொடங்கியவர் (இ. 1952)

1897 – ராம் பிரசாத் பிசுமில், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1927)

1899 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய புதின எழுத்தாளர் (இ. 1972)

1908 – பிரான்சிசுக்கோ மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (இ. 1919)

1930 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (இ. 2016)

1932 – டி. வி. கோபாலகிருஷ்ணன், தமிழக கருநாடக, இந்துத்தானி இசைக் கலைஞர்

1933 – ஜீன் வைல்டர், அமெரிக்க நடிகர், இயக்குநர் (இ. 2016)

1935 – பஸ்லுர் ரஹ்மான், பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

1947 – லாலு பிரசாத் யாதவ், பீகாரின் 20வது முதலமைச்சர்

1951 – மித்திர வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (இ. 2019)

1969 – பீட்டர் டிங்க்லேஜ்ரமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1975 – சத்யன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்

1986 – சயா லபஃப், அமெரிக்க நடிகர்

1990 – சவிதா புனியா, இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீராங்கனை

2004 – உத்ரா உன்னிகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

இன்றைய தின இறப்புகள்


கிமு 323 – பேரரசர் அலெக்சாந்தர், மக்கெடோனிய மன்னர் (பி. கிமு 356)1557 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் (பி. 1502)

1895 – டானியல் கிர்க்வுட், அமெரிக்க வானியலாளர் (பி. 1814)

1934 – லெவ் வைகாட்ஸ்கி, பெலருசிய-உருசிய உளவியலாளர் (பி. 1896)

1936 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1906)

1970 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி (பி. 1881)

1979 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1907)

1983 – கன்சியாம் தாசு பிர்லா, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1894)

1994 – அ. துரைராஜா, இலங்கைப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1934)

1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழறிஞர் (பி. 1933)

2013 – வித்தியா சரண் சுக்லா, இந்திய அரசியல்வாதி (பி. 1929)

2016 – இந்தர் மல்கோத்ரா, இந்திய இதழாளர், நூலாசிரியர் (பி. 1930)

இன்றைய தின சிறப்பு நாள்


அமெரிக்கர் வெளியேறிய நாள் (லிபியா)