ஆற்காடு அடுத்த மேல் விஷாரத்தை சேர்ந்தவர் அக்பர்பாஷா. இவரது மகன் அப்துல் ஜலால் (18). அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்துல்ரஹ மான், அம்ஜலா ஆகியோருடன் ஒரே டூவீலரில் நேற்று முன்தினம் மேல குப்பத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
அங்குள்ள டாஸ்மாக் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது டூவீலர் மீது டிப்பர் லாரி மோதியது.
இதில் அப்துல் ஜலால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தினகிரி போலீஸ் எஸ்ஐ யுவராஜ் மற்றும் போலீசார் அப்துல் ஜலாலின் சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம்டைந்த அப்துல்ரஹமான், அம்ஜலா ஆகியோர் மேல் விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.