ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர், வி.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்திநகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாக காரணங்களுக்காக இந்த மின் நிறுத்தம் வரும் 22-ந்் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.