காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட ஆலப்பாக்கம், ஆயர்பாடி, கட்டளை, பன்னியூர், மாகாணிப்பட்டு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவுள்ள இடத்தை நெமிலி தாசில்தார் ரவி நேற்று ஆய்வு செய்தார். அப்போது வீடு கட்டுவதற்கு இட மின்றி உள்ள நபர்களின் விவரங்களை அந்தந்த பகுதி விஏாகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்காக பொதுமக்களால் கொடுக்கப்பட்ட மனுக்கள் சில உரிய ஆவணங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களின் உண்மைத் தன்மை குறித்து விஏாகளிடம் கேட்டறிந்தார்.அப் போது மண்டல் தாசில்தார் மகாலட்சுமி, பிடிஓ அன்பரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.