ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து எஸ்சி/எஸ்டி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை பெல் நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.

பெல் டிஏவி பள்ளியில் ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு கடைபிடிக்காததை கண்டித்தும், பாதுகாவல் துறையில் சீனியாரிட்டியை கடைபிடிக்காததை கண்டித்தும், பீரியாரிடிகல் கூட்டத்தை முறைப்படி நடத்தாதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெல் எஸ்சி/எஸ்டி அமைப்பின் பொதுச்செயலாளர் தேவேந்தின், தலைவர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினார்கள். முடிவில் அமைப்புச் செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்சி எஸ்டி அமைப்பின் ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.