ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த வாலாஜா துணைமின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பின் கீழ் மின் பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற இருப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வன்னிவேடு, மோட்டூர், ஆற்காடு தெத்து தெரு, சார்பனார் தெரு, ஒத்தவாடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, அணைக்கட்டு ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், இந்திரா தெரு, கம்பர் தெரு, ஆதித்தனார் தெரு, குமார் நூல் கம்பெனி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.