முன்பெல்லாம் உங்கள் பணம் திருடு போகிறது என்றால் உங்கள் பர்ஸில் கைவைத்தால் தான் முடியும். பேருந்திலோ, கூட நெரிசல் உள்ள திருவிழாக்கடை பக்கமோ இதற்கென்றே பிரத்யேகமாக பிக்பாக்கெட் கொள்ளையர்கள் இருப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது. இணைய வழியில் நூதனமான முறையில் நம் பணத்தைக் கொள்ளையடிக்கும் யுத்திகளோடு பலர் இருக்கிறார்கள்.
இன்னொன்று நாமே சிலத் தவறுகளைச் செய்கிறோம். ஆம்…திருடனைக்கூட கைவைக்க விட மறுக்கிறோம். நாமே நம் பர்ஸூக்குள் பணம் சேராமல் பார்த்துக் கொள்கிறோம்.
அது எப்படி எனக் கேட்கிறீர்களா? உழைத்தால் பணம் சேரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உழைத்த பணத்தை சேமித்து வைப்பது அதைவிட பெரியக்கலை. சில விசயங்களை பர்ஸில் வைத்தால் நமக்குப் பணமே சேராது.
சிலர் யாராவது உறவினர்களோ, நண்பர்களோ இறந்துவிட்டால் அவர்கள் மீது கொண்ட பிரியத்தால் அவர்களின் புகைப்படத்தை தங்களது பர்ஸூக்குள் வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் இறந்தவர்களின் புகைப்படங்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கவே கூடாது. பொதுவாகவே பர்ஸ் லெட்சுமி தேவி குடியிருக்கும் இடம்.
அங்கு, இறந்தவர் புகைப்படத்தை வைப்பது எதிர்வினையையே ஏற்படுத்தும், எப்படி இறந்துபோன ஆன்மாக்களை பர்ஸில் வைப்பது தவறோ, அதேபோல கடவுளின் படத்தை வைத்திருந்தால் பர்ஸில் பணம் கொட்டும் என்பதும் அவ நம்பிக்கையாகும்.
இப்போதே உங்கள் பர்ஸில் இறந்தவர் படம் இருந்தால் எடுத்து ஒதுக்கி வைத்துவிடுங்கள்!