வேலுார் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் வேலுார் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 500 படுக்கை வசதிகளுடன், அவசர சிகிச்சை மையம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6 பிரத்யேக அறுவை சிகிச்சை அறைகள், கூடுதலாக 29 அறுவை சிகிச்சை அறைகள், 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுடன் இந்த மருத்துவமனை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, இதயசிகிச்சை மற்றும் ஆய்வகங்கள், படுக்கை 29 வசதிகளுடன் கூடிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவு, ரத்த சேமிப்பு மற்றும் ரத்த நன்கொடையாளர் மையம், 50 டயாலிசிஸ் படுக்கை வசதிகள், உயர்நிலை நோய் கண்டறியும் மற்றும் சிகிச்சைக்கான கதிரியக்கவியல் மற்றும் அதிநவீன ஆய்வகங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ மனையை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.