ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அன்னை சத்யா நகர் பகுதியில் திரவுபதியம்மன் கோயில் அருகே உள்ள ஸ்ரீதேவி புத்து நாகம்மன் கோயிலில் 30 அடி உயரமுள்ள ஸ்ரீ மகாவீர முனீஸ்வரர் சாமி சிலை நிறுவப்பட்டுள்ளது.
The Maha Kumbabhishekam was held in a special manner for the 30 feet tall Muniswara in Walajapet 

30 அடி உயரமுள்ள ஸ்ரீ மஹா வீர முனீஸ்வரர் சாமி சிலைக்கு இன்று மகா கும்பாபிஷேக விழா மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

முன்னதாக காலை 7 மணிக்கு மங்கள இசை, விநா யகர் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, புண்யாகவாசனம் 2ம் கால யாகசாலை பூஜைகள் மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் ஆன்மீக அன்பர்கள் அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.