ஆதார் கார்டு ரகசியத்தை பாதுகாக்கும் புதிய மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்வது எப்படி..!


இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காலத்தில் அனைத்து பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமாகிறது.

அத்தகைய ஆதார் விவரங்களை அனைத்து இடங்களிலும் பகிர வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆதாரை பாதுகாக்கும் மாஸ்க்டு பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

இன்றைய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காலத்தில் அனைத்து பணிகளுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியம்.

உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது வரை அனைத்து செயல்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமாகிறது.

அரசின் சலுகைகள் சமூகநீதி திட்டங்கள் என அனைத்தையும் பெறுவதற்கு ஆதார் கார்டு மிக அவசியம்.

இந்த நிலையில் (UIDAI) அமைப்பு வழங்கியுள்ள ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் உங்கள் ஒவ்வொருவருக்கும் எந்த அளவு முக்கியம் என்பதை பலரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள்.

உங்கள் ஆதார் எண் இந்த 12 இலக்க எண்ணை வைத்து உங்களுக்கு தெரியாமல் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும் அதனால் ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்கு எண் என்பது உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இத்தகைய முக்கியமான ஆதார் கார்டு எண்ணை எந்த காரணத்தைக் கொண்டும் யாரிடமும் பகிர கூடாது என கூறப்படுகிறது.

எனவே ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைக்க வேண்டிய மத்திய அரசு மாஸ்க் ஆதாரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாஸ்க் இந்த ஆதாரில் உங்கள் ஆதார் எண்களில் உள்ள கடைசி நான்கு எண்கள் மட்டுமே வெளியில் தெரியும் எஞ்சியவை பாதுகாப்பாக வைக்கப்படும்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


இந்த மாஸ்க் ஆதார இணையதளத்திற்கு சென்று எளிதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஆதார் எண் அனைத்தையும் அளிக்க விரும்பாவிட்டால் இந்த மாஸ்க் ஆதார பயன் படுத்தலாம்.

இந்த ஆதார் கார்டு அரசின் எல்லாத் துறைகளும் ஏற்றுக்கொள்ளும் அதோடு அரசால் வழங்கப்படுகின்றன, அனைத்து சமூக நலத்திட்டங்களை பெறுவதற்கும், இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலத்தில் (UIDAI) அமைப்பு டுவிட்டரில் பதிவேற்றம் செய்தியில் நீங்கள் உங்கள் ஆதார் எண் அனைத்தையும் வெளியிட விரும்பாவிட்டால்.

விஐடி அல்லது மாஸ்க்டு அதை பயன்படுத்தலாம் இது நாடு முழுவதும் அரசு சார்பில் இது ஏற்றுக்கொள்ளப்படும்.

மாஸ்க்டு ஆதாரை myaadhaar.uidai.gov.in/genricDownloadAadhaar என்ற இணையதளத்தில் பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்க்டு ஆதார் எப்படி பதிவிறக்கம் செய்வது


https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.

அங்கு 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு விடுதல் வேண்டும்.

அதன் பிறகு அடுத்ததாக மாஸ்க்டு ஆதார் தேவை என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் கேப்ட்ச வெரிஃபிகேஷன் என்பதை பதிவிட வேண்டும்.

அதன்பிறகு குறிக்கும் ஓடிபி என்ற பட்டனை அழுத்தினால் உங்களுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

இறுதியாக ஆதாரில் பதிவிடப்பட்ட உங்களுடைய செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும்.

இந்த ஓடிபி எண்ணை பதிவிட்டு மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.