குறள் : 772

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது


மு.வ உரை :

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.


கலைஞர் உரை :

வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.


சாலமன் பாப்பையா உரை :

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.


Kural 772

Kaana Muyaleydha Ampinil Yaanai

Pizhaiththavel Endhal Inidhu


Explanation :

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.


Horoscope Today: Astrological prediction for June 06, 2022


இன்றைய ராசிப்பலன் - 06.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


06-06-2022, வைகாசி 23, திங்கட்கிழமை, சஷ்டி திதி காலை 06.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.25 வரை பின்பு பூரம். மரணயோகம் பின்இரவு 02.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla neram

காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிப்பலன் -  06.05.2022 | Today rasi palan - 06.05.2022

மேஷம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வரவிற்கேற்ப செலவுகள் இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

சிம்மம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கன்னி

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நிம்மதி ஏற்படும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும்.  வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். எதிலும் நிதானம் தேவை.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

கும்பம்

இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடும். சிலருக்கு அரசியல் பிரமுகர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

மீனம்

இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001