நெமிலி அடுத்த பழைய கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் நரேந்திரகுமார். இவரது மகன் கிஷோர் (30). நெமிலி பஸ் ஸ்டாண்டில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் அங்கு(65) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் தொழில் முறையில் ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கிஷோர் அங்குவின் கடையின் முன் குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கடை எதிரே அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். எஸ்ஐ சிரஞ்சீவிலு வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்தார்.