பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை தீபிகா படுகோனே. 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். தற்போது தீபிகா படுகோனே நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது திடீரென நடிகை தீபிகா படுகோனேவிற்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த அவரை உடனே மருத்துவமனைக்குப் படக்கழு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தபிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டி வருகின்றனர்.