ராணிப்பேட்டைக்கு இம்மாதம் 20ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகைதருகிறார். புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பிறகு அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முதல்வர் விழா ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று : மைதானத்தில் நடந்த பூமி பூஜைக்கு அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். பூஜைகள் முடித்து பந்தக்கால் நடப்பட்டது.

பிறகு பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி துவங்கியது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, ராணிப்பேட்டை சப் கலெக்டர் பூங்கொடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற் பொறியாளர் திரிபுரசுந்தரி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.