இன்று காலை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிலையில்: ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கான குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார்

ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

விடுதி கண்காணிப்பாளர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராணிப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

வகுப்பறையில் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்