கலவை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கலவை அடுத்த கலவைபுத்தூர் கிராமத்தைச் சோர்ந்தவர் ராஜா மகன் கோபிநாத் (25). இவர் நேற்று தனது தந்தைக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக தனது பைக்கில் கலவைக்கு சென்றார். அப்போது, எதிரே வேகமாகவும் தாறுமாறாக வந்த வாகனம் இவரது பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், கோபிநாத் பலத்த காயமடைந்தார். இதைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு கலவை அரசு மருத்துவனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், கலவை காவல் நிலையத்தில் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த தினகரன் மகன் ராஜ்குமார் (29) என்பதும் விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.