ஆரணி அடுத்த சித்தேரி அருகில் உள்ள விலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (30). லாரி டிரைவரான இவர் நேற்று ஆரணியில் இருந்து லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு அரக்கோணம் சென்றார்.

லோடு  இறக்கி வைத்து விட்டு மீண்டும் ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பகல் 1 மணி அளவில் வாலாஜாபேட்டை அடுத்த வீசி மோட்டூர் பகுதியில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு எதிரே உள்ள கடைக்கு சென்று சிக்கன் பக்கோடா சாப்பிட்டு விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற பைக் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனையில் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.