அரக்கோணம் பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. அது குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Authorities investigate dead fish floating in Arakkonam Big Lake


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெரிய ஏரியில் நேற்று திடீரென மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு துர்நாற்றம் வீசியது.

தகவல் அறிந்த நகராட்சி ஆனணயர் லதா, பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் சுகாதார அலுவலர்கள் சம்பவ இடத்தினை பார்வையிட்டு செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் 5 டன் அளவுக்கு மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஏரி தண்ணீரில் ரசாயனம் ஏதேனும் கலந்து மீன்கள் கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து கண்டறிய தண்ணீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.