வேலுார் சிஎம்சி மருத்துவமனை எதிரே ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், 'சிஎம்சி மருத்துவமனைக்கு தினமும் வரும் 10 ஆயிரம் பேர், ஆற்காடு சாலையை கடந்து சென்று வருகின்றனர்.

இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக மருத்துவமனை மற்றும் ஆற்காடு சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது' என்றார்.

எம்எல்ஏ கார்த்திகேயன் கூறுகையில், இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கு, பொதுப்பணித்துறை சார்பில் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.

சப் கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், மாநகராட்சி 2வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.