ஆ +னி =ஆனி
‘ஆ’ தமிழ் எழுத்துக்களில் இரண்டாம் எழுத்து பசுவையும் குறிக்கும்.ஆகா..என இசையை ரசிக்கவும் பயன்படும். ஆ … என அச்சத்தை காட்டவும் ,மறுக்கவும் பயன்படும் சொல்லாக இருக்கிறது.

னி …நி.. பூரணம் .முழுமை நிறைந்த பொருள்.பரம் பொருள் .பசுக் கூட்டத்தின் தலைவன்.புல்லாங்குழல் ஊதி ஆனிரைக் கூட்டத்தை மேய்த்தவன்,மாயக்கண்ணன். மது சூதனன்.சிந்தையை அவன்பால் ஈர்ப்பவன் பரந்தாமன். பலராமன்,பரசுராமன் என எத்தனை பெயர்கலயுள் அழைத்தாலும் ‘நி’ ஒருவன் தான் எங்களைக் காப்பவன்.

‘ஆனுருக்கு’ பசும்பாலில் இருந்து வரும் வெண்ணை ,நெய், தயிர், மோர் போன்று பல பெயர்களை தன்னகத்தே கொண்டவன்.

‘நி’ பசுவையா மேய்த்தாய் கண்ணா / பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் தாய்மை குணத்துடன் பால் கொடுக்கும் பசுவிற்கும் உனக்கும் என்ன வேறுபாடு.எல்லோரையும் சமமாய் நேசித்து உன்னை பக்தி கொண்டவரை காப்பவன் அல்லவா கண்ணன்.

‘ஆனி’ மாதத்தில் கேடு வந்தாலும் கேடத்தை கொடுக்கும் பரம்பொருளாகிய திருமாலை வணங்கினால் கெட்டவை விலகி நல்லவை நாளும் நடக்கும்.

திருமாலை வணங்குவோம் இந்த மாதத்தை இனிமையாக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.