குறள் : 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
மு.வ உரை :
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
கலைஞர் உரை :
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
சாலமன் பாப்பையா உரை :
சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.
Kural 781
Seyarkariya Yaavula Natpin Adhupol
Vinaikkariya Yaavula Kaappu
Explanation :
What things are there so dificult to acquire as friendship ? What guards are there so dificult to break through by the efforts (of one�s foes) ?
Horoscope Today: Astrological prediction for June 15, 2022
இன்றைய ராசிப்பலன் - 15.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
15-06-2022, ஆனி 01, புதன்கிழமை, பிரதமை திதி பகல் 01.32 வரை பின்பு தேய்பிறை துதியை. மூலம் நட்சத்திரம் பகல் 03.33 வரை பின்பு பூராடம். மரணயோகம் பகல் 03.33 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 15.06.2022 | Today rasi palan - 15.06.2022
மேஷம்
இன்று உங்களுக்கு கை, கால் வலி, சோர்வு போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.
மிதுனம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
கடகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழில், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் வருமானம் சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
மீனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், வீண் விரயங்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிட்டும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001