குறள் : 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து
மு.வ உரை :
பரந்து நிற்க்கும் புகழை விரும்பி உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர் வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
கலைஞர் உரை :
சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
தம்முடன் சொர்க்கத்திற்கு வராது பூமியில் மட்டும் நிலைத்து நிற்கும் புகழை விரும்பி, உயிரையும் விரும்பாத வீரர், தம் கால்களில் வீரக்கழலைக் கட்டுவது அவர்க்கு அழகே.
Kural 777
Suzhalum Isaiventi Ventaa Uyiraar
Kazhalyaappuk Kaarikai Neerththu
Explanation :
The fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).
Horoscope Today: Astrological prediction for June 11, 2022
இன்றைய ராசிப்பலன் - 11.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
இராகு காலம் | Indraya Nalla Neram
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 11.06.2022 | Today rasi palan - 11.06.2022
மேஷம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.
ரிஷபம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கடகம்
இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் நற்பலன் ஏற்படும்.
துலாம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
தனுசு
இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.