தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு!! திடுக்கிடும் புகார்!!

600 cell phone towers magic in Tamil Nadu: Company complains of loss of up to Rs 100 crore


தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் டவர் அமைக்கும் ஒரு நிறுவனம் இந்தியா முழுமையும் 26,000 செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. அவற்றில் தமிழகத்தில் 6000க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் இருந்துள்ளது. 

2018ம் ஆண்டு அந்நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால் செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்தநிலையில் அந்த டவர்களை ஆய்வு செய்ய சென்றபோது பல மாவட்டங்களில் டவர்கள் மாயமாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. 

600 டவர்கள் திருடப்பட்டதால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.