ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திங்கள் மக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் தலைமை  வகித்தார். துணை கலெக்டர்கள் சேகர், தாரகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து மனுக்களை வாங்கினர்.

வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உத்வி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி மனு அளித்தனர்.
மின்சார துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்னைகள், குடி நீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என 227 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. மனுக்கள் தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க டிஆர்ஓ உத்தரவிட்டார்.