திமுக எம்பி கனிமொழிக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திமுக எம்பி கனிமொழி ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்தபோதே அவர் தேர்தலில் வாக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழி எம்பிக்கு தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

சமீபத்தில்தான் சோனியாகாந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகி வீடு திரும்பிய நிலையில் தற்போது கனிமொழி மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது