ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 54025 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
இதுவரை 53177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர்
61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று (ஜூன் 24 ம் தேதி) ஒரே நாளில் 1,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 24) 25,896 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 616; செங்கல்பட்டு 266; திருவள்ளூர் 71,கோவை 64 , கன்னியாகுமரி 62, காஞ்சிபுரம் 50, மதுரை 26; திருச்சி 14 , திருநெல்வேலி 29, தூத்துக்குடி 19, ராணிப்பேட்டை,16, சேலம் 11; திருப்பூர் 10, தேனி 9 , கிருஷ்ணகிரி 8, கடலூர் மற்றும் சிவகங்கை 7 , திருவண்ணாமலை, விருதுநகர் 6, வேலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை 5, விழுப்புரம், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் 4, திருவாரூர், நாமக்கல் தர்மபுரி,தஞ்சாவூர் 3, கரூர் 2; ராமநாதபுரம், திருப்பத்துார், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் திண்டுக்கல் , அரியலுார்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டஙகளில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,359 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,65,490 ஆக அதிகரித்துள்ளது. இன்று 621 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,21,552 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (23 ம் தேதி) 497 ஆக இருந்த நிலையில் இன்று (24ம் தேதி)சென்னையில் 616 ஆக அதிகரித்துள்ளது இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,678 ல் இருந்து 5,912 ஆக அதிகரித்துள்ளது.