செ‌ன்னை‌யி‌ல் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், 1 முதல் 5ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார்.

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.

காலை சிற்றுண்டி திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டம் தொடங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்கப்படும்.சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை.

தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டியலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது.

குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும்.

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும். என கீதாஜீவன் தெரிவித்தார்.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000

உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை - இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது | 

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலை.களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

Tamilnadu Girl Student Rs 1000 Scheme Apply Online 2022 | Scheme: Rs.1000 Higher Study Scholarship

இந்த திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 25-ம் தேதி (நேற்று) முதல் ஜூன் 30-ம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி, இத்திட்டத்தில் பயன்பெற உள்ள மாணவிகள் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு உயர்கல்வி துறைச் செயலர் தா.கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.

மாணவிகளின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களைப் பயன்படுத்தி, கல்லூரிகள் மூலமாகவும், மேற்கண்ட இணையதளம் மூலமாகவும் மாணவிகள் விண்ணப்பத்தை பதிவு செய்தனர். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல், அவர்களது படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.