சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கீழாண்டை தெருவில் உள்ள பழைய மோட்டார் ஒன்று பழுதடைந்ததால் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை.

இது குறித்து பலமுறை பஞ். தலைவர் சுதா மற்றும் யூனியன் சேர்மன் கலைகுமார் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலிகுடத்துடன் குடிநீர் கேட்டு ரெண்டாடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டடவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சோளிங்கர் யூனியன் சேர்மன் கலைகுமார் ரெண்டாடியை சேர்ந்தவர். அவரது ஊரிலேயே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்க்கது.