👉 1913ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பி. சுந்தரய்யா ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார்.


முக்கிய தினம் :-


உலக தொழிலாளர் தினம்

👉 இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை வாதிட்டது. மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.


பிறந்த நாள் :-


மன்னா டே

🎶 இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகரான மன்னா டே 1919ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரபோத் சந்திரா டே.

🎶 இவர் செம்மீன் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார். மக்களின் மனங்களைக் கவர்ந்ததால் இவர் மன்னா டே என்று அழைக்கப்பட்டார்.

🎶 60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை பிரபலமானவைகள். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தாதாசாஹேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

🎶 காலத்தால் அழியாத பல அமரகீதங்களைப் பாடி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 94வது வயதில் (2013) மறைந்தார்.


ரமோன் கஸல்

👉 நவீன நரம்பியல் துறையின் தந்தை சான்டியாகோ ரமோன் கஸல் 1852ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஸ்பெயினின் பெடில்லா டி அரகான் நகரில் பிறந்தார்.

👉 உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவி, அழற்சி நோய்கள், காலரா, நுண்ணுயிரியல், எபிதீலியல் செல்கள், திசுக்களின் அமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து வந்தார்.

👉 இவரது நரம்பு மண்டல கட்டமைப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1906ல் இத்தாலிய விஞ்ஞானி கமிலியோ கோல்கியுடன் இணைந்து மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.

👉 சிறந்த நரம்பியல் விஞ்ஞானியான இவர் 82வது வயதில் (1934) மறைந்தார்.

இன்றைய தின நிகழ்வுகள்


305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார்.

1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது.

1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.

1576 – திரான்சில்வேனியா இளவரசர் இசுட்டீவன் பாத்தரி, அன்னா ஜாகியலனைத் திருமணம் புரிந்தார். இருவரும் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் இனை ஆட்சியாளர்களாயினர்.

1707 – இங்கிலாந்தும், இசுக்கொட்லாந்தும் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்கும் ஒன்றிணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1753 – தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1776 – இல்லுமினாட்டி குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.

1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.

1794 – பிரெஞ்சுப் படையினர் எசுப்பானியரைத் தோற்கடித்து, 1793 இல் தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.

1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.

1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

1844 – ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.

1851 – லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டு இராணுவம் நியூ ஓர்லென்சைக் கைப்பற்றியது.

1865 – பிரேசில் பேரரசு, அர்கெந்தீனா, உருகுவை ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

1866 – அமெரிக்காவில் மெம்பிசு இனக்கலவரம் ஆரம்பமானது. மூன்று நாட்களில் 46 கறுப்பர்களும், இரண்டு வெள்ளையினத்தவரும் கொல்லப்பட்டனர்.

1875 – 1873 இல் எரிந்து அழிந்த இலண்டன் அலெக்சாந்திரா அரண்மனை மீண்டும் அமைக்கப்பட்டது.

1884 – ஐக்கிய அமெரிக்காவில் எட்டு-மணிநேர வேலை நாள் வேண்டி பொது அறிவிப்பு வெளியானது.

1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1891 – பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வாலத்தின்போது படையினர் சுட்டதில் 9 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமுற்றனர்.

1893 – உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.

1900 – ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொஃபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழந்தனர்.

1915 – லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் இருந்து ஆரம்பித்தது. இது புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1,198 பேர் உயிரிழந்தனர்.

1919 – செருமனியப் படைகள் பவேரிய சோவியத் குடியரசை அழிக்கும் பொருட்டு மியூனிக் நகரினுள் நுழைந்தன.

1925 – சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929 – 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஈரான்–துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1,121 பேர் காயமடைந்தனர்.

1930 – குறுங்கோள் புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

1931 – நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.

1940 – கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் போர் காரணமாக நிறுத்தப்பட்டன.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படை துப்ருக் முற்றுகையை ஆரம்பித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: 200 கம்யூனிசக் கைதிகள் ஏதென்சில் நாட்சிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் இறந்ததை செருமனியின் செய்தி வாசிப்பவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் பெர்லினில் நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோவியத் கொடியை ஏற்றினார்கள்.

1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பரப்புரை அமைச்சர் ஜோசப் கோயபெல்ஸ், அவரது மனைவி மேக்டா பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனையின் முன்னேற்றத்தை அடுத்து செருமனியின் தெம்மின் என்ற இடத்தில் 2,500 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டனர்.

1946 – மேற்கு ஆஸ்திரேலியாவில் பில்பாரா என்ற இடத்தில் ஆத்திரேலியப் பழங்குடிகள் மனித உரிமை, போதுமான சம்பளம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 3 ஆண்டுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தில் இணைக்கப்பட்டது.

1956 – யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

1956 – மினமாட்டா கொள்ளை நோய் அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

1957 – இங்கிலாந்து, ஆம்ப்சயர் என்ற இடத்தில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்.

1960 – இந்தியாவில் குசராத்து, மகாராட்டிரம் மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.

1977 – தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

1978 – சப்பானியர் நவோமி யூமுரா தன்னந்தனியாக வட முனையை அடைந்த முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

1987 – இரண்டாம் உலகப் போரின் போது அவுஷ்விட்ஸ் வதை முகாமில் கொல்லப்பட்ட யூதப் பெண்மதகுரு இதித் ஸ்டைன் பாப்பரசரால் புனிதப்படுத்தப்பட்டார்.

1989 – இந்திய அமைதி காக்கும் படையின் வவுனியா சிறையை உடைத்து விடுதலைப் புலிகளும் பொதுமக்களுமாக 43 பேர் தப்பி வெளியேறினர்.

1993 – இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார். டி. பி. விஜயதுங்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 – 1924 இல் காணாமல் போன பிரித்தானிய மலையேறி ஜார்ஜ் மலோரியின் உடல் எவரெஸ்டு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

2004 – சைப்பிரசு, செக் குடியரசு, எசுத்தோனியா, அங்கேரி, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலந்து, சிலோவாக்கியா,, சுலோவீனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2009 – சமப்பால் திருமணம் சுவீடனில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

2011 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் புனிதப்படுத்தப்படுத்தப்பட்டார்.

2011 – பயங்கரவாதத்திற்கு எதிரான போர்: அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்றைய தின பிறப்புகள்


1326 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1332)1769 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1852)

1852 – சான்டியாகோ ரமோன் கஸல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (இ. 1934)

1875 – காவ்ரீல் திக்கோவ், சோவியத் வானியலாளர் (இ. 1960)

1913 – பி. சுந்தரய்யா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி (இ. 1985)

1913 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (இ. 1973)

1919 – மன்னா தே, இந்தியப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2013)

1927 – இராசம்மா பூபாலன், மலேசிய விடுதலைப் போராளி, பெண்ணியவாதி, ஜான்சி ராணி படைப் போராளி, கல்வியாளர்

1944 – சுரேஷ் கல்மாடி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி

1950 – இராய் படையாச்சி, தென்னாப்பிரிக்கத் தமிழ் அரசியல்வாதி (இ. 2012)

1951 – கோர்டன் கிரீனிட்ச், மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாளர்

1958 – சாலிந்த திசாநாயக்க, இலங்கை அரசியல்வாதி (இ. 2019)

1971 – அஜித் குமார், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1974 – கஸ்தூரி, இந்தியத் திரைப்பட நடிகை

1988 – அனுஷ்கா சர்மா, இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை

இன்றைய தின இறப்புகள்


1521 – துவார்த்தே பர்போசா, போர்த்துக்கேய எழுத்தாளர், நாடுகாண் பயணி (பி. 1480)1555 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501)

1572 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)

1873 – டேவிட் லிவிங்ஸ்ட்டன், ஆங்கிலேய மதப்பரப்புனர், நாடுகாண் பயணி (பி. 1813)

1904 – அன்டனின் டுவோராக், செக் இசையமைப்பாளர் (பி. 1841)

1945 – ஜோசப் கோயபெல்ஸ், செருமானிய அரசுத்தலைவர் (பி. 1897)

1959 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (பி. 1890)

1965 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (பி. 1910)

1980 – ஷோபா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1962)

1993 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கையின் 3வது அரசுத்தலைவர் (பி. 1924)

1994 – அயர்டன் சென்னா, பிரேசில் கார்ப் பந்தய வீரர் (பி. 1960)

2005 – முத்துக்கூத்தன், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடலாசிரியர், வில்லுப்பாட்டுக் கலைஞர் (பி. 1925)

2006 – ந. சுப்பு ரெட்டியார், தமிழறிஞர், எழுத்தாளர் (பி. 1916)

2011 – அலெக்ஸ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

2011 – உசாமா பின் லாதின், அல் கைடா தலைவர் (பி. 1957)

2012 – சண்முகசுந்தரி, தமிழ்த் திரைப்பட நடிகை

2021 – ஹெலன் மர்ரே பிரீ, அமெரிக்க வேதியியலாளர் (பி. 1923)

இன்றைய தின சிறப்பு நாள்


மே நாள்தொழிலாளர் தினம்