TNPSC group 4 syllabus download link here

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

தமிழக அரசு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் (TNPSC) தேர்வாணையம் குரூப்-4 தேர்வு நடத்துகிறது.

இந்த ஆண்டு அறிவிப்பில் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்-4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்து உள்ளதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தற்போது ஏழு விதமான பதவிகளுக்கு நடத்தப்பட உள்ளது.

  • இளநிலை உதவியாளர் – Junior Assistant
  • தட்டச்சர் – Typist
  • சுருக்கெழுத்து தட்டச்சர் – Steno Typist
  • கிராம நிர்வாக அலுவலர் – Village Administrative Officer
  • வரித்தண்டலர் – Bill Collector
  • நில அளவர் – Field Survey
  • வரைவாளர் – Draftsman

இந்தப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் நேரடியாக நிரப்பப்படுகிறது 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் தமிழ்நாட்டில் அதிக அளவில் இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளார்கள்.

தேர்வு முறை என்ன


குரூப் 4 தேர்வு ஆனது ஒரே ஒரு எழுத்து தேர்வு அடிப்படையாகக் கொண்டது, இந்த எழுத்து தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும் முதல் பகுதி தமிழ்மொழி தேர்வாகும்.

இதில் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது, இதனை கட்டாயம் தேர்வாளர்கள் எழுத வேண்டும்.

இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஆங்கில மொழிப் பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது, தற்போது தமிழ் மொழி மட்டுமே இருக்கிறது.

இதனை தேர்வாளர்கள் கண்டிப்பாக எழுதி குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியமாக உள்ளது.

இரண்டாவது கட்டமாக பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகிறது இதற்கான பாடத்திட்டம் பழைய பாடத் திட்டத்தை சார்ந்து இருக்கும்.

இருப்பினும் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, கலாச்சாரம் ,மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகியவை இதில் அடங்கும்.

எனவே இந்த எழுத்து தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் இடம் பெறும் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

மேலும் பாடத்திட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தை காண முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும் https://www.tnpsc.gov.in/

அடுத்ததாக மெனு பாரில் (Recruitment) என்பதை கிளிக் செய்து அதில் பாடக்குறிப்பு (Syllabus) என்பதில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் அதாவது (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும் இப்பொழுது நேரடியாக பாடதிட்டம் பதிவிறக்கம் லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

பின்னர் புதிய பக்கத்திற்கு செல்லும் அங்கு குரூப்-4 தேர்வுக்கான கட்டப்பட்ட பாடத்திட்டம் (Revised Syllabus) என்பதை கிளிக் செய்ய வேண்டும் இப்போது புதிய பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் முழு விவரமும் இதில் தெரிந்துகொள்ளலாம்.