நெமிலி போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அம்மநாயனார் கோயில் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (60). இவர் மயூரா தியேட்டர் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, பின்புறம் உள்ள இறைச்சிக்கூட வளாகத்தில் 6 ஆடுகளை கட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்த போது, இறைச்சி கூடத்தின் கதவு பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே இருந்த 6 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சம்சுதீன் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆடு திருடிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.