Minister SS Sivasankar informed that free bus passes will be issued to school and college students soon

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

சென்னை, பெரம்பூர், அயனாவரம் பணிமனைகளில் கடந்த 3 மாதங்களில் அதிக நாட்கள் பணிக்கு வராத மற்றும் அதிக விடுப்பு எடுத்த பணியாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கலந்துரையாடினார்.

அவர் பேசும்போது, “பொதுமக் கள் எனக்கு அளிக்கும் மனுக் களில் 50 சதவீதத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு கோருதல் தொடர் பாகவே உள்ளன.

எனவே, நமது பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது நிர் வாகத்துக்கும், உங்களது குடும்பத் துக்கும் எவ்வளவு இழப்பு என்பதை உணர வேண்டும். பணியாளர்கள் முழுமையாக பணிக்கு வந்து, புதிய தொழில்நுட்பங்களுடன் பணிபுரிந்தால், அன்றாடம் ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்கலாம். அதற்கான நடவடிக்கையைத்தான்

துறை மேற்கொண்டு வருகிறது. சாதாரண கட்டணப் பேருந்து களில் பணிபுரியும் பணியாளர் களுக்கு பேட்டா வழங்குவது, ஊதிய நிர்ணயத்தை பேமேட்ரிக் ஸில் பொருத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள், ஊதிய ஒப்பந்தத் தில் இறுதி செய்யப்படும்” என்றார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்படாமல் இருந்தது. தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு இலவசப் பேருந் துப்பயண அட்டையை விரைவில் வழங்குவது தொடர்பாக, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.