குறள் : 764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

மு.வ உரை :

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய் தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

கலைஞர் உரை :

எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை :

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

Kural 764

Azhivindri Araipokaa Thaaki Vazhivandha
Vanka Nadhuve Patai

Explanation :

That indeed is an army which has stood firm of old without sufering destruction or deserting (to the enemy).


Horoscope Today: Astrological prediction for May 29, 2022



இன்றைய ராசிப்பலன் - 29.05.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

29-05-2022, வைகாசி 15, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.55 வரை பின்பு அமாவாசை. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Nalla neram

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 29.05.2022 | Today rasi palan - 29.05.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் வந்து சேரும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.

மிதுனம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கடகம்

இன்று நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பூர்வீக சொத்து வழியாக அனுகூலப்பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 11.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதியத்திற்கு பிறகு சிக்கல்கள் குறைந்து நல்லது நடக்கும்.

துலாம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.15 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.

மகரம்

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். தொழில் ரீதியாக வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். 

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001