குறள் : 751

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

மு.வ உரை :

ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

கலைஞர் உரை :

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை :

தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

Kural 751

Porulal Lavaraip Porulaakach Cheyyum
Porulalladhu Illai Porul

Explanation :

Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.

Horoscope Today: Astrological prediction for May 15, 2022

இன்றைய ராசிப்பலன் - 15.05.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

15-05-2022, வைகாசி 01, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.46 வரை பின்பு பௌர்ணமி. சுவாதி நட்சத்திரம் பகல் 03.34 வரை பின்பு விசாகம். சித்தயோகம் பகல் 03.34 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Nalla Neram

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 15.05.2022 | Today rasi palan - 15.05.2022

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் சிக்கனமாக செயல்பட்டால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

கடகம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்ப ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்று சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை நிலவும்.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். 

துலாம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். 

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் குறைய பேச்சில் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்

இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுபகாரியங்கள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். 

கும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். நெருங்கியவர்கள் வகையில் தேவையில்லாத நெருக்கடிகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001