Mohini Ekadashi 2022

பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. 

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது.
 
இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.

ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்

ஏகாதசி மகத்துவம்!


பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ”உனக்காக நாங்கள் காத்திருக்க… நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே…” என்று ஏளனம் செய்தார்களாம்.

அவர்களிடம், ”இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு… சுத்தம் பாகவதஸ்யான்னம்!” என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.

”சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்…”

அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.

ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.

அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்.

சித்திரை மாத பாபநாசினி விரதம் மேற்கொள்வதால் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போகும் என்பது ஐதீகம். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் இந்த பாபநாசினி ஏகாதசி விரதம்

ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!
ஏகாதசி வழிபாடு..!
. இது பாவநிவர்த்தி கொடுக்கும். அன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.

 மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.

புராணத்தில் ஏகாதசி 


 விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.

 எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.

ஏகாதசி விரத முறை :


ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள்.

ஏகாதசி விரத மகிமை :


 சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.

உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
 
Mohini Ekadashi has a great significance among Hindus. Mohini Ekadashi is considered as most auspicious festival. Lord Vishnu is worshipped on this day. According to the Drik Panchang , Mohini Ekadashi will be observed on Shukla Paksha in the month of Vaishakha. This month Mohini Ekadashi will fall on Thursday, 12th May 2022.

As per Hindu Mythology, Lord Vishnu had appeared as Nymph (Apsara) so it is called as Mohini Ekadashi. According to the Hindu Scriptures, at the time of Samudra Manthan, when the nectar was churned out, Lord Dhanvantri came out of the ocean with the kalash of Amrit. This created a dispute between Demons (Asuras) and Deities (Devtas) about who will consume the Amrit. Deity went to the Lord Vishnu to seek his help. Lord Vishnu appeared as Nymph (Apsara) to take Amrit from Demons (Asuras) and gave it back to dieties (Devtas) and helped them to ensure the immortality. So, this day is called as Mohini Ekadashi. It is also mentioned in Mahabharata that Lord Krishna explained the importance of Mohini Ekadashi to Arjun and Yudhishthir. Mohini Avtar is considered to be the most charismatic and beautiful Avtar of Lord Vishnu.

  • Mohini Ekadashi Date and Time
  • Mohini Ekadashi Date 12th May 2022, Thursday
  • Mohini Ekadashi Tithi Begins 11th May 2022, 7;31 PM
  • Mohini Ekadashi Tithi Ends 12th May 2022, 6;51 PM
  • Mohini Ekadashi Parana Time 13th May 2022, 5;32 AM To 8:14 AM