ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வாயில் வெள்ளை துணிகள் கட்டி அகிம்சை அறவழி போராட்டம் ராணிப்பேட்டை நகர தலைவர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையத்தில் பேரறிவாளன் விடுதலை எதிர்த்து காங்கிரஸார் அறவழி போராட்டம்

இந்த அறவழி போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம் கே விஷ்ணுபிரசாத் தலைதாங்கி பேசினார்.

முன்னாள் எம் எல் ஏ வாலாஜா அசேன், மாநில செயலாளர் அக்ராவரம் பாஸ்கர், மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட இளைஞ்சர் காங்கிரஸ் செயலாளர் அருள், மாவட்ட எஸ் எஸ் டி தலைவர் நாகேஷ், மாவட்ட சிறுபான்மை தலைவர் நிசாத் அகமத் மாவட்ட மகிளா காங்கிரஸ் துணை தலைவர் மோனிஷா, மாவட்ட துணை தலைவர் மோகன், நகரமன்ற உறுப்பினர் ஜோதி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது உள்ளிட்ட பதாககைகளை கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனால் முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.